கோவை: போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் தொடர் குறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தியும் தொடர் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவைதனியார் கல்லூரி மாணவன் கொலை வழக்கு பூதாகரமாகி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு போதை பொருள்கள் தான் காரணம் என்றும் அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சியின் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாவட்டத்தில் போதை பொருள் குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிந்த தடை செய்ய வேண்டும் தொடர் படுகொலைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசிடம் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டனங்களை பதிவு செய்தும் முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டம் கல்வித் தொழில் என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் நிலையில் தற்பொழுது கோவை மாவட்டத்தில் அரங்கேறி வரும் தொடர் படுகொலைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் எனவே காவல் துறையினர் உரிய கவனம் செலுத்தி இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.





