கோவையில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகவையில் வேலை…

கோவை: வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

கோவை வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை பணி நியமன முகமை மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் “வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை” (ATMA) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண்மை இயக்குநர், அறிவுரைப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர்கள் (Block Technology Managers- BTM) உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் (Assistant Technology Managers ATM) ஆகிய காலி பணியிடங்களை தகுதியான பணிநியமன முகமை (Recruitment Agency) மூலமாக தற்காலிகமாக நிரப்பிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தகுதியும் அனுபவமும் கொண்ட திறமையான பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியான பணிநியமன முகமை (தேவைப்படும் தகுதிகள் 1 முன் அனுபவம், 2. சேவை கட்டண விவரம் மற்றும் 3. பதிவு எண்) தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்த புள்ளியுடன் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, ஜி.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர்-13 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ 27.08.2026க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...