கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தின் உட்புறத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்துள்ளது. இங்கு உட்பகுதியில் மரங்கள் அதிக அளவில் இருக்கும் இடத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்து சுமார் 10 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது, மேலும் காக்கி உடை அணிந்துள்ள நிலையில்,அவர் அணிந்திருந்த ஆடையில் ஏசிசி நிர்வாக பணியாளர்களுக்கு வழங்கபடும் ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஏசிசி நிர்வாகத்தில் பணியாற்றிவந்த நபரா என்ற கோணத்தில் விசாரணையை மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் உதிவிஆய்வாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவில்லை. உயிரிழந்த நபர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருப்பதால் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் கோவை மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





