அதுக்குள்ள இப்படியா?… இயக்குநரின் மகளால் பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த சம்பவம்

கோவை: கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் டிரோல் மெட்டீரியலாக மாறியுள்ளார் பிரபல சீரியல் நடிகையும், இன்ப்ளூஸருமான பிரபலமான ஒருவர். அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா? அவரை இப்படி சிக்க வைத்த பிரபல இயக்குநரின் மகள் யார் தெரியுமா? அதைப் பற்றிய சிறு தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

வெள்ளித்திரையில் அறிமுகமாகாமல் எத்தனையோ சின்னத்திரை நடிகைகளில் சினிமாவில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. வெற்றி என்றால் மக்கள் மத்தியில் இடம்பிடிப்பதைத் தான் சொல்கிறாம். அந்த அதிகளவில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியல் தற்போது மெல்ல மெல்ல இடம்பிடித்து வருபவர் தான் தீபிகா வெங்கடாச்சலம்.

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான பள்ளி சீரியலான கனா காணும் காலங்கள், தற்போது 2k கிட்ஸ்களுக்கு ஏற்றாற் போல 2வது பாகமாக வெளியாகியது. இதில், நடித்து பிரபலமானவர் தான் தீபிகா வெங்கடாச்சலம். அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார். இதே சீரியலில் கவுதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ராஜா வெற்றி பிரபு என்பவருடன் காதலில் விழுந்தார்.

பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மெஹந்தி வைபவம் உள்பட தடபுடலமாக ஒரு செலிபிரிட்டி திருமணம் போலவே நடந்தது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமணம் முடிந்த கையோடு, தீபிகாவும், ராஜாவும் ரீல்ஸ்களை பறக்க விட்டனர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமுண்டு.

Advertisement

இதனிடையே, உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸிலும் நடிகை தீபிகா நடித்தார். அதைத்தொடர்ந்து, சில திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே, டிஜிட்டல் கிரியட்டராகவும் அவர் வலம் வருகிறார். இன்ஸ்டாகிராமில் பிராடக்ட் ப்ரமாஷன், கொளாப்ரேஷன், யூடியூப் விலாக் என்று படு பிஸியாகவே இருந்து வருகிறார்.

அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தீபிகா, “தனது அடுக்குமாடி குடியிருப்பின் வாட்ச் மேனின் பொண்ணை தத்தெடுத்து, அவரது படிப்பு செலவை கவனித்து வருகிறேன்,” என்று கூறினார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன. இவர், அந்த காவலாளியின் மகளுடன் அடிக்கடி ரீல்ஸூம், ஷார்ட்ஸூம் போடுவார். இது சமூக வலைதளங்களில் வைரலாகின.

Advertisement

இப்படி சமூகவலைதள வாழ்க்கையில் அனைத்தும் நேர்முகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த தீபிகாவுக்கு, அதன்பிறகு சறுக்கல் ஏற்பட்டது என்றே கூறலாம். அதாவது பிரபல இயக்குநரான பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி, தீபிகா வெங்கடாச்சலம் குறித்து பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தீபிகா வெங்கடாச்சலம் குறித்து மற்றவர்கள் தன்னிடம் சுறிய கருத்துக்கள் என்று கூறி அவர் பேசிய வீடியோவில், தீபிகா கணவருக்கு உண்மையாக இல்லை. நண்பர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது, குழந்தையை படிக்க வைப்பதாகச் சொல்லி, அந்தக் குழந்தையின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இது தொடர்பான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் பார்வை, தீபிகா பக்கம் திரும்பியது. இருப்பினும் அந்த வீடியோவில் அவர் தீபிகாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாததால், யூகமாகவே மாறியது.

இருப்பினும், இது தனக்கெதிரான வீடியோ என்பதை உணர்ந்த தீபிகா, வெளிநாட்டில் இருப்பதால், அவரும் ஹேசல் ஹைனியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். தான் ஊருக்கு திரும்பியதும், தன்னைப் பற்றிய சர்ச்சை வீடியோவை வெளியிட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று போஸ்ட் போட்டிருந்தார்.

இதனிடையே, தீபிகா வெங்கடாச்சலத்தின் முந்தைய செயல்கள் அனைத்தையும், நெட்டிசன்கள் தற்போது தோண்டி எடுத்து வம்பு இழுத்து வருகின்றனர். அந்த வகையில், அவரது எக்ஸ் லவ்வையும் இழுத்துள்ளனர்.

தீபிகா வெங்கடாச்சலம் இதற்கு முன்பு சுகி விஜய் என்பவரை சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் இடையே பிரேக்கப் ஆனது. அதன்பிறகே, ராஜா வெற்றி பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஓராண்டு லிவிங்கில் இருந்த பிறகு, அதன்பிறகே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எழுந்த தகவலும் பூதாகரமாக வெடித்தது.

இவர்களின் திருமணத்தின் போது, சுகி விஜய் சமூக வலைதளத்தில் போட்ட பதிவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “உண்மையை சொன்னால் திருமணமே நின்றுவிடும்,” என்று அவர் கூறியது பல்வேறு விவாதங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியது. ஆனால், இதனை அவர் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. இதையும் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.

தீபிகா வெங்கடாச்சலம் குறித்து ஹேசல் ஹைனி வெளியிட்ட வீடியோவுக்குப் பிறகு, தீபிகாவின் ஒவ்வொரு செயல்களும் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. அந்த வகையில் மறைந்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், உலக நாயகன் கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் செய்தது போன்ற ஃபேன் மீட் என்ற பெயரில் தீபிகா செய்த கிரிஞ்ச் விஷயங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

அதேபோல, 8 ஆண்டுகளுக்குப் பிறகு பஸ்ஸில் போனதாக வெளியிட்ட வீடியோவும் நெட்டிசன்கள் மத்தியில் டிரோலாகி வருகிறது. இன்ஸ்டாவின் புகழ் உச்சத்தில் இருந்த தீபிகாவின் சமூக வலைதள வாழ்க்கை, ஒரே நாளில் தலைகீழாக மாறியிருப்பது பேசு பொருளாகி வருகிறது. உச்சத்திற்கு வருவதற்கு முன்பே இப்படியா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

கோவை வந்த நடிகர் சூரி- சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கூறிய கருத்து…

கோவை:நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை ஏமாற்றம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டமன்றத்தை பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்று கோவை வந்த நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மண்டாட்டி திரைப்பட...

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...