OTP, ஆதார், PAN விவரங்களை வாங்கி கைவரிசை! 2 பேரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி

கோவை : கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தித் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை கருமத்தம்பட்டி, கணியூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது தனியார் நிறுவன ஊழியருக்கு கடந்த 15-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாகவும், அவரது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்த ஊழியர், மர்ம நபர் கேட்டபடி தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னை தொடர்பு கொண்ட மர்ம நபரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஓடிபி எண்ணை பெற்று மர்ம நபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

இதேபோல், கருமத்தம்பட்டி, சங்கோதிபாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயது தனியார் நிறுவன ஊழியரையும் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். வங்கி அதிகாரி போல பேசிய அவர், கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தித் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஓடிபி, பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை கேட்டுள்ளார். மர்ம நபரின் பேச்சை உண்மை என நம்பிய அந்த ஊழியர், தனது விவரங்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது 2 கிரெடிட் கார்டு கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 774 மோசடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து இருவரும் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரிடமும் மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வரிசையில் நின்று உணவு வாங்கி; மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ.!

கோவை அசோகபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட கனிமொழி எம்.எல்.ஏ.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...