புகார்களுக்கு உடனடி தீர்வு… கோவை போலீசாரின் புதிய சேவை திட்டத்திற்கு மக்கள் ஆதரவு!

கோவை : கோவை மாநகரில் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் – 2026’ பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் விரைவான காவல் சேவையை வழங்கும் நோக்கில் இந்த ஆவணம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இதன் மூலம், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் தாமதமின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரண மனுக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரி நியமிக்கப்படுகிறார். எளிய மனுக்களுக்கு 14 நாட்களுக்குள்ளும், விரிவான விசாரணை தேவைப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்கள் கிடைத்ததும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதுதவிர, வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போலீஸ் நிலையங்கள், சரக அலுவலகங்கள், உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் சேவைகளை வழங்குவதற்காக எந்தவொரு போலீசாரும் பொதுமக்களிடம் இருந்து பணம், பரிசு அல்லது வேறு எந்த பலனையும் கேட்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

போலீஸ் நிலைய அளவில் புகாருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் கமிஷனர் என அடுத்தடுத்த அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிய கியூஆர் கோடு, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தவர்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

புகார்தாரர் விசாரணையில் திருப்தி இல்லை என தெரிவித்தால், அவரது தகவல் சம்பந்தப்பட்ட துணை கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது வரை பெரும்பாலான புகார்தாரர்கள் தங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருப்தி இருப்பதாக தெரிவித்து வருவதாகவும், குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் பொதுமக்களிடம் ஆதரவை பெற்று செயல்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

AI தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுலா இணைய தளம் துவக்கம்…

கோவை: AI தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா இணையதளத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...