கோ-கோ விளையாட்டைக் காப்பாற்றுங்கள்! மாவட்ட ஆட்சியரிடம் பயிற்சியாளர் மனு!

கோவை: தமிழ்நாட்டில் கோ-கோ விளையாட்டுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், போலிச் சான்றிதழ்கள் மற்றும் போட்டி முறைகேடுகள் தொடர்பாகவும் பயிற்சியாளர் முருகவேல் புகார் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முருகவேல், கடந்த 2001-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கோ-கோ பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவித்தார். ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் பங்கேற்கும் இவ்விளையாட்டுக்கு போதிய அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்காததால், வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

கடந்த 2019-ம் ஆண்டு மூப்புநிலை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் முறையாகப் பதிவு செய்து சங்கம் உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான எஸ்டிஏடி (SDAT) உரிய அங்கீகாரம் வழங்க மறுப்பதாகவும் முருகவேல் குற்றம்சாட்டினார்.

மேலும், முறையான போட்டிகள் நடத்தப்படாமலேயே போலிச் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். சர்வதேச அளவிலானவை எனக் கூறப்படும் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, தகுதியற்ற சிலர் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement

அதே நேரத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த உண்மையான வீரர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இதனால், விளையாட்டில் சாதித்த பலர் வாழ்வாதாரத்திற்காக உணவு விநியோகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டிகளிலும் நடுவர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் முருகவேல் குற்றம்சாட்டினார். போட்டிகளில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

இதுதொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, கோ-கோ விளையாட்டுக்கு முறையான அங்கீகாரம் வழங்குவதுடன், போலிச் சான்றிதழ்கள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போட்டிகள் நேர்மையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரம்பரியமிக்க கோ-கோ விளையாட்டைப் பாதுகாத்து, திறமையான ஏழை, எளிய மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தை உறுதி செய்ய தமிழக அரசும் விளையாட்டுத்துறையும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் பறிபோகும் அபாயம்? கோவையில் 96 குடும்பங்கள் தவிப்பு!

கோவை சரவணம்பட்டியில் 9.54 ஏக்கர் நில விவகாரம் தொடர்பாக 96 குடும்பங்களின் நில உரிமை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குற்றச்சாட்டு

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...