வீட்டுல வளர்க்கிற சேவல்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? கோவையில் வெளியான சிசிடிவி காட்சிகள்!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை கோட்டை பிரிவு பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்கள் திருடப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோட்டை பிரிவு பகுதியில் சமீபகாலமாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்கள் மாயமாவதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.

Advertisement

அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 3 முதல் 4 சிறுவர்கள் வரை ஒன்றாக வந்து செல்வதைப் பொதுமக்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் வீடுகளின் முன்புறம் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்களைப் பிடித்துச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. பின்னர், அவர்கள் அங்கிருந்து விரைவாகத் தப்பிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சேவல்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. பண்டிகைக் காலத்தில் சேவல்களை விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் இத்தகைய திருட்டுகள் நடைபெறுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், சேவல்கள் எதற்காகத் திருடப்படுகின்றன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Advertisement

வீடுகளில் செல்லப்பிராணிகளைப் போலவும், தோட்டங்களில் ஆர்வத்துடனும் வளர்க்கப்படும் சேவல்கள் திருடப்படுவதாக எழுந்துள்ள புகார், பொதுமக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை பிரிவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சேவல் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் வேறு யாரேனும் செயல்படுகிறார்களா என்பதையும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தீபாவளி ஷாப்பிங் போறீங்களா? கோவையில் 10 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள்!

தீபாவளியை முன்னிட்டு கோவை கடைவீதிகளில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. திருட்டைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...