சூலூரில் பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 4 மற்றும் 5 வயதுடைய பள்ளிச் சிறுமிகள் இருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, பன்றி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த தவசி (18) என்பவரை சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி எல்கேஜியும், 5 வயது சிறுமி ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகிலுள்ள பன்றி இறைச்சிக் கடையில் பணிபுரிந்த இளைஞர், அவர்களைக் கடையின் பின்புற அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து தப்பி வீட்டுக்குச் சென்ற சிறுமிகள் இருவரும், நடந்ததைத் தாயிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமாதேவி வழக்குப் பதிவு செய்து, அந்தக் கடையில் பணிபுரிந்த தவசியைப் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை தவசி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, போக்சோ சட்டப் பிரிவுகள் உள்பட 6 பிரிவுகளின் கீழ் தவசி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மருதமலையில் 20 அடி உயரத் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றம்! – VIDEO

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோவை மருதமலை முருகன் கோயிலில் 20 அடி உயரத் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...