கோமாவில் இருந்த நபரின் ரேகையை கொண்டு பெற்ற கடன்- வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…

கோவை, வடவள்ளியில் கோமாவில் இருந்த தந்தையின் விரல் ரேகையை பெற்று 1.70 கோடி மோசடி செய்த நிலையில் வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வந்ததால் மகன் அதிர்ச்சி அடைந்தார்.

கோவை, வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் அரசு ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் சேஷாத்திரி (வயது 55 ). கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்ரமணியம் உடல்நிலை பாதிப்பால் கோமா நிலைக்கு சென்று விட்டார்.


அவரை அவரது மகன் சேஷாத்ரி மற்றும் குடும்பத்தினர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கு பணம் தேவைப்பட்டது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் சேஷாத்ரியின் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று தருவதாக கூறி உள்ளனர்.
அப்போது வீட்டிற்க்கான ஆவணம் தந்தை சுப்பிரமணியம் பெயரில் இருந்ததால் கோமா நிலையில் இருந்த அவரை தொண்டாமுத்தூரில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரது கை விரல் ரேகையை ஆவணத்தில் பெற்று உள்ளனர்.

அதன் பிறகு சேஷாத்ரியிடம் லட்சம் பணத்தை அவர்கள் கொடுத்து உள்ளனர். இதற்கு இடையே உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலையில் இருந்த சுப்பிரமணியம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சேஷாத்ரியின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டின் பெயரால் 17 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் இருப்பதாகவும் எனவே வீட்டை ஜப்தி செய்ய போவதாகவும் கூறி உள்ளனர்.

இதனால் சேஷாத்திரி அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் கோமா நிலையில் இருந்த தந்தை சுப்ரமணியம் பெற்று ராஜா மற்றும் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் அவரது தந்தை பெயரில் வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் 25 லட்சம் கடன் பெற்றதும் பிறகு அந்த பணத்தை சிதம்பரம் என்பவர் வங்கி கணக்கிற்கு அவர்கள் மாற்றி ஏதும் தெரிய வந்தது. அதன் பிறகு அதே ஆவணத்தை வைத்து வீட்டை ஜப்தி செய்ய வந்த தனியார் நிதி 17 கோடி கடன் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேஷாத்திரி சம்பவம் குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இடைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் ராஜா, சிதம்பரி , பிரபாகர், சாமுவேல் , பிரியா மற்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோமா நிலையில் இருந்தவரின் விரல் ரேகை பெற்று வங்கி மூலம் நடந்த இந்த மோசடி வடவள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கிராமப்புற இளைஞர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு கொடுக்கும் SKPSR திறன் மையம்!

கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் உடுமலையில் புதிய தொழிற்கல்வி திறன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...