Plane Crash: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது: Video footage!

Plane Crash: குஜராத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் சற்று நேரத்திற்கு முன் கீழே விழுந்து நொறுங்கியது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் இன்று லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

புறப்பட்ட 3 நிமிடங்களில் விமானம் திடீரென, ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெடித்தது. இந்த விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதி ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு 90 பேர் கொண்ட மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.

விமானம் வீடுகள் மீது விழுந்து வெடித்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள, எத்தனை பேருக்கு காயம் என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மத்திய அரசு அம்மாநில முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

242 பயணிகளுடன் சென்ற விமானம் வீடுகள் மீது விழுந்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

Video

Join WhatsApp