கோவை பெண்களே, உங்களுக்கு தொழிற்பயிற்சி வேண்டுமா?

கோவை: கோயம்புத்தூர். மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நேரடிசேர்க்கை (Spot Admission) 19.06.2025 நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர். மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான நேரடிசேர்க்கை (Spot Admission) 19.06.2025 நடைபெறவுள்ளது.

Advertisement

19.06.2025 முதல் நடைபெறவுள்ள நேரடி சேர்க்கைக்கு(SPOT ADMISSION) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதில் 8 ஆம்வகுப்பு, 10 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவிமையம் மூலம் விண்ணப்பித்திட வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும்மகளிருக்கு உச்சவயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA)Desktop Publishing Operator (DTPO) IoT Technician (Smart Health Care)Sewing Technology தொழிற்பிரிவுகளும், ஈராண்டுபயிற்சியில் Instrument Mechanic (IM) Electronics Mechanic (EM) Information Technology (IT) Technician Medical Electronics (TME) தொழிற்பிரிவுகளும், ஆறுமாத பயிற்சியில் Smart Phone Technician Cum App Tester தொழிற்பிரிவும் பயிற்று விக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற் சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.

பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பிரதி மாதம் தலா ரூ.750/-உதவித்தொகை, புதுமைபெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000/- மிதிவண்டி, சீருடை, தையற்கூலி. காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள். 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ்பாஸ் வழங்கப்படுவதுடன், நவீன தொழிற்வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு Industrial Visit. Inplant Training, Internship Training வழங்கப்படுறது.

Advertisement

மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்,94990 55692, 98661 28182, 88381 58132, 94422 39112 ஆகும்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விமர்சையாக நடைபெற்ற கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம்

கோவை: கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஶ்ரீ...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...