கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரம்; அழகிகள் மீட்பு!

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் கிழக்கு ராமலிங்கம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்கள் புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் (44) மற்றும் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மகாமுனிஷா (34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதேபோல், துடியலூர் போலீசார் கணேஷ் நகர் முதல் வீதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தனர்.

அதில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புரோக்கர்களான கணேஷ் நகரை சேர்ந்த மாரிராஜன் (35), பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாவனா (25) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கும் ஒரு தாயாக மாறி, இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இளம் பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பை இங்கு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...