காலை உணவு திட்டத்தில் பயன்பெற்ற மாணவ மாணவிகள்- கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை…

கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு மாதங்களில் 21,242 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி கல்வியை நன்றாக கற்க வேண்டும் என்பதற்காகவும், பெற்றோர்களின் சிரமங்களை குறைக்க ஏதுவாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அந்தவகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொங்கல், ரவா கிச்சடி வெண்பொங்கல், கோதுமை ரவா உப்புமாபருப்பு சாதம்காய்கறி சாம்பார் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 83 மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 சிறப்பு பள்ளி என மொத்தம் 167 பள்ளிகளில் பயிலும் 21242 மாணவ,மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...