பள்ளி முடிந்து திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்: சகமாணவிகள் கதறல்!

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர் மாநகராட்சி 86வது வார்டில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகள் சௌமியா(13). இவர் கோவை கெம்பட்டி காலனியில் உள்ள தனது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கியிருந்து, அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து சௌமியா பாட்டி வீட்டுக்கு வந்தார். பின்னர் அறிவொளி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஆட்டோவில் செல்வதற்காக கெம்பட்டி காலனி பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மாணவி மீது மோதியதி, அவரை இழுத்துச் சென்றது. அப்போது சிறுமி அருகில் இருந்த கல்லில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி உயிரிழந்ததை அறிந்த சக பள்ளி மாணவிகள் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செங்குட்டை நாராணாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் (46) என்பவர்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...