பாட்டிக்கு உடனடி தீர்வு: கோவை கலெக்டர், பத்திரிகையாளர்கள் உதவி!

கோவை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மூதாட்டிக்கு கோவை கலெக்டர் மற்றும் பத்திரிகையாளர்கள் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisement

கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 79) என்ற மூதாட்டி. இவரது மகன் லாரி ஓட்டுநராக இருந்தபோது சேமித்து வைத்து இருந்த ரூ.15,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை, அவரது மரணத்திற்குப் பிறகு கண்டெடுத்துள்ளார்.

இந்த பணத்தை வங்கியில் மாற்ற முயன்ற அவர், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயனின்றி திரும்பி உள்ளார்.

இதனிடையே இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி, “இந்த நோட்டுகளில் தேசத் தந்தை காந்தியின் படம் இருக்கிறது. மாலையாகப் போடுவேன். தீயிட்டுக் கொளுத்த மாட்டேன். இதனை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

இந்த செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் செய்தித்தளம் உடனடியாக பதிவு செய்து அதிகாரிகளிடமும் பகிர்ந்தது.

இந்த நிலையில், மூதாட்டியின் பணத்திலிருந்து ரூ.10,000 மாற்றிக் கொடுக்க முன்னோடி வங்கிக்கு உத்தரவிட்டார். மேலும், அருகிலிருந்த பத்திரிகையாளர்களும் மூதாட்டிக்கு ரூ.3,000 கொடுத்து, உதவினர்.

Advertisement

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates)...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...