கராத்தே பயிற்சி பள்ளிகளுக்கு வாய்ப்பு: கோவை ஆட்சியர் அழைப்பு!

கோவை: கோவையில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே ஆகிய தற்காப்புக் கலையில் அடிப்படைப் பயிற்சி அளிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கராத்தே அடிப்படை பயிற்சியினை 3 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 36 பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கான தகுதிகள்:-

Advertisement
  • * குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
    தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் – கராத்தே சான்றிதழ் பயிற்சி (Certificate course)
    * பெண் பயிற்சியாளர்கள் இருக்கும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    * Don 4th degree in Karate (Black belt) முடித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
    * கராத்தே அடிப்படை பயிற்சி வழங்க தேர்ந்தெடுக்கும் நிறுவனமானது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவம் இருக்க வேண்டும்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

கராத்தே பயிற்சியினை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 22.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரயில்வே துறையில் ஆட்குறைப்பு- DYFI கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அண்மையில் ரயில்வே வாரியம் 14.8 லட்சம் பணியிடங்களில் இரண்டு சதவிகிதத்தை நடப்பு ஆண்டில் குறைக்க...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...