காந்தி ஜெயந்தியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை – நடவடிக்கை எடுத்த காவல்துறை

கோவை: காந்தி ஜெயந்தி தினத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த 60 பேரைக் கைது செய்த மாவட்ட காவல்துறையினர் மொத்தம் 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தி தினமான நேற்று(அக்-2) பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

அதன் பேரில், கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளயம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 60 நபர்களை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து அந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்
3 நபர்களிடம் இருந்து 32 மது பாட்டில்களும், பேரூரில் 10 நபர்களை பிடித்து 236 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள், கருமத்தம்பட்டி பகுதியில் 12 நபர்களை கைது செய்து 742 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதேபோன்று பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 177 மது பாட்டில்கள் பறிமுதல் அதேபோன்று வால்பாறையில் 10 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 477 மது பாட்டில்கள் மற்றும் 19 லிட்டர் கள் மற்றும் மேட்டுப்பாளைத்தில் 9 நபர்களை கைது செய்து 189 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.

Advertisement

இதேபோன்று கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 11 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 136 மது பாட்டில்கள் மற்றும் 50 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்து இருந்த 60 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஓவியம் மற்றும் திரை அனுபவம்- கோவையில் நீண்ட நேரம் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சிவக்குமார்…

கோவை: கோவையில் நடிகர் சிவக்குமார் அவருடைய இரண்டு புத்தகங்கள் பற்றி வாசகர்களுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள பொறியாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சிவக்குமாரின் "PANTING OF...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...