பாஜகவில் இருந்து விலகி முதன்முறை கோவைக்கு வருகை புரிந்த அண்ணாமலை- விமான நிலையத்தில் திரண்ட கூட்டம்…

கோவை: பாஜகவில் இருந்து விலகிய பிறகு முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அளித்திருந்தார் அவரது கடிதம் ஆனது ஐந்தாம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அன்றைய தினம் இணைய வழியில் பேசிய அவர் புதிய கட்சியை துவக்குவதாக தெரிவித்திருந்தார் அவரது ஆதரவாளர்கள் பலரும் We The Leader என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணைய வழியில் அதில் இணைந்திருந்தனர் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்து அவரது கட்சியில் இணைந்து இருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று விமான மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார் கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக We The Leader என்று முழக்கமிட்டு பூங்கொத்துக்களை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அண்ணாமலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டெங்கு காய்ச்சல்- கோவையில் 7 பேர் சிகிச்சை…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.