குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை, தொண்டாமுத்தூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று, ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு பூட்டி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கள்ளச்சாவி போட்டுத் திருடிச் சென்ற மர்ம நபரின் துணிகரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

நேற்று இரவு நேரத்தில் குளத்துப்பாளையம் தெருக்களுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்து உள்ளார். பின்னர், அங்கு உள்ள வீடுகளின் வாசல்களுக்கு நேராகச் சென்று, வீட்டில் உள்ளவர்கள் தூங்கி விட்டார்களா என்பதை உற்றுப் பார்த்து மிகத் துணிச்சலாக நோட்டமிட்டு உள்ளார்.

​அப்போது ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைக் கண்ட அந்த நபர், அதனை கள்ளச்சாவி பயன்படுத்தி பூட்டை உடைத்து பைக்கைத் திருடிக் கொண்டு தப்பி சென்று உள்ளார். காலையில் எழுந்து பார்த்த வாகன உரிமையாளர், தனது பைக் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது ​அதில், அந்த மர்ம நபர் மிகவும் கூலாக நடந்து வந்து, வீடுகளை நோட்டமிட்டு, பைக்கைத் திருடிச் செல்லும் பதற வைக்கும் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது.

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் இடையே வைரலாகி வருகிறது.

இந்நிலையில், குளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் நள்ளிரவு நேரக் காவல் துறை ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மேம்பாலத்தில் திருமண போட்டோ சூட்- வலுக்கும் புகார்கள்…

கோவை: கோவையில் மேம்பாலத்தில் போட்டோ சூட் எடுத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். கோவை இராமநாதபுரம் மேம்பாலத்தில் திருமணம் முடிந்த பிறகு காரில் நின்றபடி போட்டோ சூட் எடுத்து இதர வாகன ஓட்டிகளுக்கு...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...