வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை…

கோவை: GCT கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற முடிந்தது அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள GCT- அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகள் Red Zone ஆக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி GCT கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், கோவில்மேடு, வடகோவை, ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி பி.என்.புதூர் ஆகிய பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எனவே இந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கபடுகிறது. இன்று (29.04.2026) மாலை 5 மணியிலிருந்து 02.05.2026 மாலை 5 மணி வரை இந்தப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...