கோவை அரசு மருத்துவமனை அருகே தலையில் கல்லை போட்டு முதியவர் கொ* !

கோவை அரசு மருத்துவமனை அருகே முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகே ஏராளமான யாசகர்கள் தங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆவர்.

Advertisement

அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் வழங்கும் உணவு மற்றும் அன்னதானத்தை பெற்று அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Read news: பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில், நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை நுழைவாயில் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது அருகே ரத்தக்கறை படிந்த கல் கிடந்தது.

Advertisement

இதனை பார்த்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜதுரை அதிர்ச்சி அடைந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர், அங்கு யாசகம் பெற்று தங்கி இருந்த முதியவரிடம் பணத்தை பறிக்க முயன்றதாக தெரியவந்தது.

Read news: கோவை அரசு மருத்துவமனை அருகே தலையில் கல்லை போட்டு முதியவர் கொ* !

அப்போது முதியவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில், ராஜேஷ் கல்லால் தாக்கி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ராஜேஷை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...