கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை: பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை மாநகராட்சிக்கு 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

Advertisement


பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வரும் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், சமயபுரம் பகுதியில் உள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தினால் கதவணை மற்றும் எந்திரங்களின் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக இன்று (7-5-2026) முதல் 10-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பில்லூர்-3 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபத்து- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன்...