பயணிகளை தவிக்கவிட்டு சண்டையிட்டு கொண்ட பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள்- காவல்துறை எடுத்த நடவடிக்கை…

கோவை: நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி சண்டையிட்டுக் கொண்ட இரண்டு தனியார் பிரிந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ஆபாசமான முறையில் பேசிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் கருமத்தம்பட்டி போலிசார் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 30க்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் பேருந்துகள் இயக்கப்படும் பொழுது நேரத்தை கடைப்பிடிப்பதில் பலமுறை சண்டைகள் எழுந்து வருகிறது. மேலும் பயணிகளை ஏற்றுவதிலும் பல்வேறு சமயங்களில் தனியார் பேருந்துகளுக்கு இடையே வாக்குவாதங்களும் மோதல்களும் அடிக்கடி எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து கோவை நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் பொழுது நேர கடைப்பிடிப்பு காரணமாகவும் பயணிகளை ஏற்றுவது தொடர்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேருந்துகளும் திருப்பூரில் இருந்து கோவை கணியூர் சுங்கச்சாவடி வரை வேகமாக ஒருவருக்கொருவர் முந்தி அடிக்க முயன்று வந்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் அச்சத்தில் இருக்கும் அவதிக்கும் உள்ளாகினர்.

ஒரு கட்டத்தில் கணியூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு பேருந்துகளையும் நிறுத்திய அந்தந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டு ஆபாசமான வார்த்தைகளை பேசி முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். மேலும் ஒருவருக்கொருவர் கொலை மிரட்டல் இருக்கும் துணியிலும் பேசியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் சாலையின் ஓரத்திலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது பின்னர் பயணிகள் இரண்டு தரப்பினரிடமும் பேசி முதலில் பேருந்தை இயக்கி தங்களை கோவையில் விடுமாறு தெரிவித்ததை தொடர்ந்து பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற நிகழ்வுகளால் பெரிதளவு பாதிக்கப்படுவதாக
பயணிகள் தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கிளீனர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தேசிய தடகள போட்டியில் கோவை பெண் காவலர் தங்கப்பதக்கம்- அவரது அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

கோவை: தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற பெண் காவலர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளார். 65வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு...

Video

கோவையில் பள்ளி சீருடையில் விதிகளை மீறிய மாணவர்கள்- வீடியோ காட்சிகள்…

ஆர்.எஸ்.புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது