தேசிய தடகள போட்டியில் கோவை பெண் காவலர் தங்கப்பதக்கம்- அவரது அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

கோவை: தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற பெண் காவலர் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

65வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தங்கப் பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Advertisement

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் 24.06.2026 முதல் 28.06.2026 வரை 65வது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், தமிழ்நாடு மாநில தடகள் அணியின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த, கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர் கவுதமி என்பவர் கடந்த 25.06.2026-ம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடம் 04.17 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தச் வெற்றியின் மூலம் அவர் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெறவுள்ள 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் (20th Asian Games-2026) இந்திய தடகள அணியின் சார்பில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ள பெண் காவலர் செல்வி கவுதமியின் இந்த சாதனைக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் பாராட்டுகளையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகளையும் கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...