கோவை சுகுணாபுரத்தில் மிலாடி நபி ஊர்வலத்தில் பங்கேற்ற அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இனிப்புகள், பழரசம், பிஸ்கட் மற்றும் குடிநீர் வழங்கினார். (
மேட்டூர் அணை திறப்பு தேதியை தமிழக முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மலைகள் காணாமல் போன விவகாரம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையிலும் மலையாள மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக ஓணம் கொண்டாடி வருகின்றனர்.
கோவை இடையர்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 61 வயது மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி 6 பவுன் தங்க நகை பறித்த கல்லூரி மாணவரை போலீஸார் பிடித்தனர்.
கோவை காரமடை அருகே வெள்ளியங்காடு – முள்ளி சாலையில் 4 குட்டி யானைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வாகனங்களை வழிமறித்த தாய் யானையின் பாச காட்சி வைரலாகி வருகிறது.
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் ஈகை மற்றும் மனிதநேயத்தை எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் மீது, ஜாதகம் மற்றும் பரிகாரத்துக்காக வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சைபர் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிதி இழப்பில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை 88,355 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், கோவையில் மட்டும் சுமார் 6,000 புகார்கள் வந்துள்ளன.
கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வரை வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் 181 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சில நாட்களில் முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாநகரில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
காலை 6:30 மணிக்கே வார்டுகளுக்குள் செல்ல வேண்டிய குப்பை சேகரிப்பு வாகனங்கள், டீசல் நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.