கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோவை துடியலூர் அருகே பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குடும்பத்தினரின் அனுமதியுடன் காரமடை அன்பு மலர் மனநல காப்பகத்தில் சேர்த்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பெண்ணை பிரிய மனமில்லாமல் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி அழுத சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
கோவை PSG மருத்துவமனை மருத்துவர்கள், குழந்தைகள் சிறிய பொருட்களை விழுங்குவது அல்லது மூச்சுக்குழாயில் சிக்க வைப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். பேட்டரி, காந்தம் மற்றும் பொம்மைகளின் சிறிய பாகங்கள் விழுங்கப்பட்டால், வீட்டிலேயே சிகிச்சை முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு மாணவர்களுக்கான கல்லூரி தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் CRI PUMP நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் திறந்து வைத்தார். இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நெல்லி பானங்கள், ஜாம், தேன் நெல்லி, கேண்டி, மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
NASA-வின் Hubble விண்வெளி தொலைநோக்கி, Large Magellanic Cloud பகுதியில் உள்ள N44 நெபுலாவில் பிரம்மாண்டமான ‘Superbubble’ அமைப்பை படம் பிடித்துள்ளது. சுமார் 210 ஒளியாண்டுகள் நீளமுள்ள இந்த அமைப்பு, நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் அவற்றின் சக்திவாய்ந்த செயல்பாடுகளை புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
ஜெர்மனியில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள The Bright World Of Metals சர்வதேச உலோகத்துறை கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம், தொழில்துறை சவால்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து கண்காட்சியில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் அதிகளவில் மது அருந்தியதாக கூறப்படும் 33 வயது கூலித் தொழிலாளி ரங்கராஜன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ‘ஹிட் லேர்ன்’ AI கற்றல் செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. குரல் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம், கற்றல் வீடியோக்கள், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.