கோவையில் மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து தம்பதி இருவரும் விஷம் அருந்திய சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், மனைவியின் 80 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறி உறவினர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவையில் கார் அடமான விவகாரத்தில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உக்கடம் பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
கோவையில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு RTO மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கணியூரில் நன்றி தெரிவிக்கும் பயணத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் குறித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்து, சிலர் பிரச்சினையை பெரிதுபடுத்த முயல்வதாக தெரிவித்தார்.
கோவை கணபதி மாநகரில் ரூ.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்து 63 மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சீட்டுப் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை காப்பாற்ற முயன்ற 18 வயது இளம்பெண் மரக்கட்டையால் தாக்கப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூலூர் அருகே கணியூரில் எம்.எல்.ஏ. சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கும் போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.