வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை… ரூ.15 ஆயிரம் கியர் சைக்கிளை நொடியில் ஆட்டைய போட்ட மர்ம நபர்!

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஊழியரின் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement

கோவை ரயில் நிலையம் மற்றும் கீதா கேண்டீன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் தினமும் தனது கியர் சைக்கிளில் வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் லாட்ஜின் தரைத்தளத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு, சைக்கிளை எளிதாக எடுத்துச் சென்று தப்பியுள்ளார்.

பணி முடிந்து வெளியே வந்த ஊழியர், தனது சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

திருடப்பட்ட கியர் சைக்கிள் வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சைக்கிள் திருடப்பட்டதால், அந்த ஊழியர் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, எந்தவித பதற்றமும் இல்லாமல் நடந்து வந்து, கண் இமைக்கும் நேரத்தில் கியர் சைக்கிளை திருடிச் செல்லும் மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எள்ளுக்கான விலை கணிப்பு- விவசாயிகள் கவனத்திற்கு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் எள் விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகிலேயே எள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் சூடான் நாடுகள் உள்ளன. 2024-ஆம்...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...