Breaking News: கோவையில் அதிர்ச்சி… பேருந்தில் வந்தவரின் ரூ.1 கோடி பணம் பறிப்பு!

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு வந்த நபரிடம் இருந்து ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாமுன் (60) என்பவர் ஹைதராபாத்தில் இருந்து பேருந்து மூலம் கோவை வந்துள்ளார். கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவர் கையில் வைத்திருந்த பையை மர்மநபர்கள் இருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாமுன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பையில் ரூ.1 கோடி பணம் இருந்ததாகவும், தன்னை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பணத்தை பறித்துச் சென்றதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

Also Read: கோவை ACC சிமெண்ட் ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

Advertisement

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதனிடையே, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

தாமுன் கோடிக்கணக்கான பணத்தை எதற்காக கோவைக்கு கொண்டு வந்தார்? அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் யார்? திட்டமிட்டு இந்த வழிப்பறி நடைபெற்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே கோவையில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த காரில் இருந்த 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தோழியின் 9 பவுன் நகை திருடி.. காதலனுக்கு KTM பைக் பரிசு! கல்லூரி மாணவி கைது!

பேருந்தில் கோவை வந்து இறங்கிய நபரிடம் ரூ.1 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவமும், தொடர்ந்து 4 பேர் பிடிபட்டுள்ளதும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைக்கு பேருந்தில் வந்த ஆந்திர நபரிடம் ரூ.1 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 4 பேர் பிடிபட்டுள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...