கோவையில் கோமாரி தடுப்பூசி முகாம்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

கோவை: கோவையில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Advertisement

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் ‘தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின்” NADCP. National Animal Disease Control Programmeதிட்டத்தின் கீழ் 2026 ஆண்டிற்கான கால் மற்றும் வாய் (கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை 9 வது சுற்று தடுப்பூசிப் பணி தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்படவுள்ளது.

இப்பணி செவ்வனே நடைபெறும் பொருட்டு இந்நோய்க்கான ஊநீர் (Vacccineஅதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறைகளில் (Walk in Coolers) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில் இத்தடுப்பூசிப் பணிக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக்குழுவினர் மூலம் குளிர் சங்கிலி முறையில் (Under Cold Chain) ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு அவ்வினத்திற்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

கால் மற்றும் வாய் (கோமாரிநோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு.

Advertisement

கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது. இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம் மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.

மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு. ஜூலை 2026.

ஆம் மாதம் 1ந் தேதி முதல் ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.


Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...