கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, கோவை குற்றாலம் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து, நீர்வரத்து சீராகியுள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
Also Read: கோவையில் 5 முக்கிய கோயில்களில் நாளை முதல் செல்போனுக்கு தடை!
இதையடுத்து, கோவை குற்றாலத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினர் அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, எச்சரிக்கையுடன் அருவியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர்வரத்து மற்றும் வானிலை நிலவரத்தைப் பொறுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





