குடும்பம் நடத்துவது போல் கோவை வாடகை வீட்டில் விபச்சாரம்!

கோவை: கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய புரோக்கர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கவுண்டம்பாளையம் அருகே உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவருக்கு (வயது 21). இவர் வடமதுரை விஐபி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது போது அவரைச் சந்தித்த நபர் ஒருவர், தன்னிடம் அழகான பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம், ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்த சென்றார்.

Advertisement

மேலும், இது தொடர்பாக துடியலூர் போலீசாருக்கு செல்போன் மூலம் அழைத்து புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தவசியப்பன் மற்றும் போலீசார் சென்றனர். 

அப்போது விஐபி காலனியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, குடும்பம் நடத்துவது போல் அக்கம்பக்கத்தில் காட்டிக்கொண்டு, இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விபச்சாரத்திற்கு அழைத்த கணபதி காந்தி தெருவைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கோவையில் விபச்சாரத்திற்கு அழகிய பெண்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனியாக சிக்குவோரிடம் பணம் பறிக்கும் செயல் அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் முதியவர் ஒருவரிடம் இதேபோல் ஒரு கும்பல் பணம் பறித்தது. அவர்களை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...