கோவையில் காதலர் தின கொண்டாட்டம்

கோவை: சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், காதல் திருமணம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மனித சமூகம் தோன்றியது முதலே காதல் தோன்றியதாகவும் இது இயற்கையானது என தெரிவித்தார். இன்றைய தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் காதலை எதிர்ப்பதாகவும் அதற்குக் காரணம் சாதி மதம் என்ற கட்டுமானம் உடைந்து விடும் என்பதுதான் என குறிப்பிட்டார்.

காதல் என்று வந்து விட்டால் சாதி மதம் மறுப்பாக மாறிவிடும் என்று பலரும் நினைப்பதாகவும் தமிழகத்தில் பெரியார் தோன்றி திராவிட இயக்கங்கள் தோன்றி பெண்ணுரிமைகள் மேலோங்கி இருக்கக்கூடிய நிலையில் கல்வி அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் காதல் திருமணங்களும் சாதி மறுப்பு திருமணங்களும் வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement

கடந்த 25 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணங்கள் இங்கு நடத்தப்பட்டு இருப்பதாகவும் அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...