ரத்து செய்யப்பட்ட குரூப் 2,2A தேர்வு இன்று துவங்கியது…

கோவை: கோவையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கியது.

Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2A தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளி ஒரே ஒரு தேர்வு மையத்தில் இந்த தேர்வு நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் இந்த தேர்வை 332 தேர்வர்களும் பிற்பகல் நடைபெறும் தேர்வை 349 தேர்வுகளும் எழுதுகின்றனர்.

தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவே அனைவரின் உடமைகளும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

கடந்த மாதம் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் ஓரிரு தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...