பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட கோவை மேயர்…

கோவை: கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஆய்வு செய்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியி கட்டுமானப் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்கு உட்பட்ட சுந்தராபுரம், காமராஜர் நகர் (கே.வி.கே.நகர்) மாநகராட்சி ஆரம்பப் பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து. குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்கு உட்பட்ட ஈச்சனாரி, லிண்டெஸ் கார்டன் பகுதியில் புதிதாக பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இந்த ஆய்வுகளின் போது, துணை மேயர் வெற்றிசெல்வன், செயற்பொறியாளர் ஜாக்குலின், 100வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், ரவீனா, நடராஜன், சுகாதார ஆய்வாளர் பாலகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாங்காய் பறித்து தருவதாக அழைத்த 15 வயது உறவினர் சிறுவன்… 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், 15 வயது சிறுவனிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற...