சிறுமியைக் காதலித்தால் சிறை உறுதி… கோவை இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை!

கோவை: சிறுமி பாலியல் வழக்கில் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை
தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேரூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை கடந்த 2022ம் ஆண்டு காணவில்லை. பெற்றோர் பேரூர் போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement

போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடினர். அதில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி பேரூர் மாசாணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஷாரூக்கான்(19) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

சிறுமியை ஷாரூக்கான் ஊட்டி, மைசூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துவந்ததும், மேலும், இதற்கு உடந்தையாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஷாரூக்கானின் நண்பர் அன்வர் உசேன்(21) என்பவரும் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஷாரூக்கான், அன்வர் உசேனை போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், ஷாரூக்கான் மற்றும் அன்வர் உசேனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

குறிப்பு: 18 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் ரீதியாக சீண்டுதல் மட்டுமல்ல, அவர்களை காதலிப்பதும், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகும்.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp