கோவையில் தொடரும் மின்தடை; பொதுமக்கள் கடும் அவதி!

கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு காரணமாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மின் பற்றாக்குறை இல்லை என்று மின்வாரியம் தெரிவித்து வருகிறது.

மேலும், வானிலை காரணங்களாலும், மின் மாற்றிகள் மற்றும் மின் வயர்களில் ஏற்படும் பழுதுகள், மரக்கிளைகளால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement

தினமும் சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், அதுமட்டுமின்றி பகல் நேரங்களிலும் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து முனையம்- தலைமை செயலாளருக்கு கடிதம் அளித்த அமைச்சர் விக்னேஷ்…

Advertisement

இவ்வாறு அறிவிக்கப்படாத மின்தடைகளால் தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில், இந்த விவகாரத்தில் கோவை மின்வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதா? எந்த பகுதி என்பதை கமென்டில் தெரிவிக்கலாம்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை; எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தெரியுமா?

கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன? எந்தெந்தப் பகுதிகளில் முதலீடு செய்யலாம்? முதலீடு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்த விரிவான அலசலை இந்தக்...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...