கோவையில் வலுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடலால் பாதிக்கப்பட்ட 3,000 ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு
சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜான் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகாலமாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக மாற்றியமைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்குப் பொருந்தும் 500 மீட்டர் தூரக் கட்டுப்பாட்டை, FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுக்கும் (Clubs) அமுல்படுத்த வேண்டும்.

சேதம் ஆகும் பாட்டில்களுக்கான சேதாரத் தொகையை வழங்க வேண்டும்.
காலி அட்டைப் பெட்டிகளுக்கான கழிவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்பந்ததாரரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பே பல கட்ட போராட்டம் கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...