“7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா?”… தனியார் பேருந்தை நடுரோட்டில் மறித்த பெண்!

கோவை: கோவை உக்கடத்தில், 7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூலித்ததாக கூறி தனியார் பேருந்து நடத்துநரிடம் பெண் பயணி ஒருவர் கேள்வி எழுப்பி, பேருந்தை நடுரோட்டில் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காந்திபுரத்தில் இருந்து உக்கடம் வழியாக அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்காக பெண் ஒருவர் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, 7 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக நடத்துநர் 10 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கூடுதலாக 3 ரூபாய் ஏன் வசூலிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நடத்துநர் முறையாக பதிலளிக்காமல், “நான் இப்படித்தான் வாங்குவேன். இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கிப் போ. வேண்டுமென்றால் RTO-விடம் புகார் கொடு” எனக் கூறியதாக தெரிகிறது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்கி, நடுரோட்டில் பேருந்தை மறித்து நடத்துநரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்களும் சக பயணிகளும் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்த பெண்ணை மிரட்டுவது போல் சைகை செய்தும் , முறைத்து செல்லும் நடத்துநரின் நடவெடிக்கைகளை வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பும் பயணிகளிடம் சில நடத்துநர்கள் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...