கோவை: கோவையில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து CPI சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசிடம் கேஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்திட வேண்டும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும்,
மாநில அரசுக்கு விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும் தூய்மை பணியாளர்கள் வேலையில் காண்ட்ராக்ட் அவுட் சோர்சிங் தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக மத்திய மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



