பாரம்பரிய உணவுப் பிரியர்களே… நீலாம்பூர் தாமரைக்கு வாங்க…!

கோவை: நீலாம்பூரில் உள்ள தாமரை எக்ஸ்க்ளூசிவ் ஃபுட் ஸ்டோரில், 100-க்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் இடம்பெற்றுள்ள சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி ஜூன் 26 முதல் ஜூலை 5, 2026 வரை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட புதிய தானிய வகைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உடல்நலத்திற்கு ஏற்ற இயற்கை உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்க்க உதவும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

பாரம்பரிய உணவுப் பிரியர்களே… நீலம்பூர் தாமரைக்கு வாங்க…!

மேலும், தாமரை நிறுவனத்தில் 9,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், கண்காட்சி காலத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட கூப்பன் கொண்டு வருவோருக்கு ரூ.199 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவச காம்போ பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தேசிய தடகள போட்டியில் கோவை பெண் காவலர் தங்கப்பதக்கம்- அவரது அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

Advertisement

இதுமட்டுமின்றி இன்ஸ்டா தாமரை நிறுவனத்தின் பக்கத்தை ஃபாலோ செய்வர்களுக்கும் இந்த காம்போ வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் இயற்கை உணவு ஆர்வலர்கள் அதிகளவில் பார்வையிட்டு பயனடையுமாறு தாமரை பிராண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...