கோவையில் ஆண் யானை மர்ம மரணம்!

கோவை: கோவையில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட தடாகத்தை அடுத்த கஞ்சிப்பள்ளம் அருகே அருள் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது.

Advertisement

அங்கு யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், நாளை யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அதன் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: கோவையில் கொடூர தாய்; கோர்ட் கொடுத்தது தண்டனை!

Advertisement

ஆண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...