கோவையில் தவெக தொண்டர் அட்டூழியம்- அப்பாவி மீது தாக்குதல் பரபரப்பு வீடியோ

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது.

Advertisement

இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு நேற்று மதுபோதையில் ஒருவர் வந்து உள்ளார். அவர் பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு ஊழியரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பெட்ரோல் பாட்டில்களில் வழங்கக் கூடாது என்ற அரசு உத்தரவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக்காட்டி ஊழியர் மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், “எனக்கு பெட்ரோல் கொடுக்க வேண்டும்.

Advertisement

நான் த.வெ.க. அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஊழியரை தாக்கியதாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

தாக்குதலில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் உறவினர் என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் காந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நேற்று இரவு பெட்ரோல் பங்க் ஊழியரை மதுபோதையில் தாக்கியதுடன் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர் என்று கூறிய நபர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சம்பத்குமார் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...