கவுண்டம்பாளையத்தில் அதி நவீன கருவி மூலம் அபராதம்…

கோவை: கவுண்டம்பாளையத்தில்
வேகத்தை அளவீடு செய்யும் நவீன கருவியின் அதிவேகமாக செல்வோர், ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நவீன வேகத்தை அளவீடு செய்யும் கருவி மூலம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பரிசோதனை செய்து அதிவேகமாக செல்வோர் மற்றும் ஹெல்மெட் அணியாதோர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கோவை மாநகருக்குள் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் ஏர் ஹாரன்கள் பறிமுதல், கண்களை கூசும் எல் இ டி விளக்குகள் பறிமுதல் என சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் நவீன வேக அளவீட்டு கருவியினை பயன்படுத்தி சிட்டி ஸ்பீடு லிமிட்டான 40 கிலோ மீட்டர் என்ற அளவை விட அதிவேகமாக வரும் வாகங்களை கண்டறிந்து அதன் நம்பர் பிளேட்களை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்து அபராதம் விதித்தனர்.

Advertisement

Also Read: Power Cut In Coimbatore | நாளை 28.8.2026 மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

மேலும் இக்கருவி மூலம் இரு சக்கர வாகனங்களில் வருவோர்களில் ஹெல்மெட் அணியாதவர்களையும் கண்டறிந்து அபராதம் விதித்தனர். இக்கருவி குறித்து தெரிவித்த போக்குவரத்து காவலர்கள் இந்த நவீன கருவியில் உள்ள கேமரா மற்றும் சென்சார்கள் மூலர் சாலையில் வரும் வாகனங்களில் வேகத்தை அதில் அளவிடுவது, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை கண்டறிந்து வாகனம் மற்றும் நம்பர்பிளேட்களை புகைப்படம் எடுத்து சேமித்து வைத்து அதனை உறுதி செய்து தேதி, நேரம் உள்ளிட்டவைகளுடன் அதன் உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பமுடியும்,

Advertisement

மேலும் வாகங்களில் பொருத்தியுள்ள ஏர் ஹாரன்களின் டெசிபல்களை அளவீடு செய்யவும் முடியும் என தெரிவித்தனர். இந்த வாகன சோதனைகளை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், துரை, கருத்தபாண்டி உள்ளிட்ட காவலர்கள் மேற்கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...