கோவையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு தொல்லை?- சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் கூறும் அறிவுரை…

கோவை: கோவை மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சுமார் எட்டு வயது வட மாநில சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது.

Advertisement

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நேற்றிரவு அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த ஊர் மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

சிறுமி நன்கு மனவளர்ச்சியுடன் இருந்து இவர்தான் இது போன்ற செயலை செய்தார் என்று கூறியிருந்தால் இந்நேரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் ஆனால் இதுபோன்று மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தான் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் யாரேனும் பொறுப்பில் விட்டு செல்ல வேண்டும் இல்லையெனில் எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...