கோவை: கோவையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை உரிமை கோருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் அரிசிபாளையத்தில் இருந்து 13.07.2026 அன்று மீட்கப்பட்ட ஆண் குழந்தை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
பின்னர், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மூலம் அக்குழந்தை மீட்கப்பட்டு 29.07.2026 அன்று குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்குழந்தைக்கு குழந்தை நலக்குழுவால் ஆதீதியன் என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டடம்மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கோயம்புத்தூர் 641 018 என்ற முகவரியில் அணுகலாம்.
தொலைபேசி எண் 0422-2300305 மின்னஞ்சல் முகவரி depucoimbatore@gmail.com ஆகியவற்றின் மூலம் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக எவரும் உரிமை கோராத நிலையில் தத்தெடுப்பு நெறிமுறைகள் 2022-ன் கீழ் அக்குழந்தை தத்தெடுப்பிற்கு தகுதியான குழந்தையாகக் கருதப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





