அரசியலில் குதித்துள்ள விஜய் போட்ட பிளான் மொத்தமும் தவிடு பொடியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இழப்பு
அரசியலில் குதித்த விஜய் தனது கடைசி படத்தை உருவாக்கும் போது பெரிய அளவில் நஷ்ட அபாயம் இருப்பதாக முன்பே எச்சரித்திருந்தாலும், கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அதனை பொருட்படுத்தாமல் மிகப்பெரிய நம்பிக்கையுடன் முதலீடு செய்தது.

ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்காமல் தயாரிப்பாளருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்க, பிரகாஷ்ராஜ், பாபி தியோலி, பூஜா ஹெக்டே, மமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆரம்பித்தில் இருந்தே படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், சில பல காரணமால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
சென்சார் சிக்கல்
இதற்கிடையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் ஜன நாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்று கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொதுவாக வெள்ளிக்கிழமைக்கு முன் சான்றிதழ் கிடைத்தால் வெளியீட்டு திட்டங்கள் சுலபமாக அமையும். இல்லையெனில் மீண்டும் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
சான்றிதழ் இன்று கிடைத்தாலும், படக்குழு ஏற்கனவே ஏப்ரல் 30ஆம் தேதி வெளியீட்டை குறிவைத்து தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதே நாளில் கர திரைப்படமும் வெளியாக இருப்பதால், இரண்டு படங்களுக்கும் நேரடி போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக தனுஷ் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதால், ‘ஜன நாயகன்’ படத்தின் வசூலில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜனநாயகனுடன் மோதும் கருப்பு
மேலும், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், மே 14ஆம் தேதி கருப்பு திரைப்படத்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகலாம். சூர்யா நடித்துள்ள இப்படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நாளில் வெளியீடு செய்யப்பட்டால் இரு படங்களுக்கும் சவாலான போட்டி ஏற்படும்.

இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ படம் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே இணையத்தில் கசிந்துவிட்டதாகவும், பலர் அதை சட்டவிரோதமாக பார்த்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த லீக் பிரச்சனை காரணமாகவே படம் திரையரங்குகளில் பெறும் வசூல் குறையக்கூடும் எனவும், அதுவே படத்தின் மிகப்பெரிய சிக்கலாக மாறக்கூடும் எனவும் சினிமா வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.



Adhellam onnum illa..loosunga 100 Rs ticket a 3000 $s kuduthu papanga