புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. நீங்க விரதம் இருந்ததே வீணாகிவிடும்

கோவை: புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள், மறந்தும் கூட சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் கடைபிடித்த விரதத்திற்கு பலன் கிடைக்காமல் போய்விடும்.

புரட்டாசி

பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக, பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான ஆன்மீக மாதங்களில் புரட்டாசி மாதம் முதன்மையானது. இந்த 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 16ம் தேதி வரும் சனிக்கிழமையுடன் இந்த மாதம் முடிவடைகிறது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (செப்டம்பர் 19) வருகிறது.

Advertisement

பெருமாளுக்கு உகந்த புனித மாதமான புரட்டாசியில் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களின் பக்தர்கள் குவிவார்கள். குறிப்பாக, திருமலை திருப்பதி ஏழுமலையானை வேண்டி, மாலை அணிந்து, திருப்பதிக்கு பாதயாத்திரையாக் சென்று வழிபாடு நடத்துவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.

என்ன செய்யலாம்

Advertisement

புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளியல் போட்டு, வீட்டை சுத்தம் செய்விட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாளை வழிபடுவார்கள் பெருமாளுக்கு உகந்த துளசி மற்றும் மலர்களை தூவி அர்ச்சனை செய்து, விஷ்ணு நாமங்களைக் கூறி வழிபாடு நடத்த வேண்டும்.

இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானதாகும். மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், சனிக்கிழமைகளில் மட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரத காலகட்டத்தின் போது, அசைவ உணவுகளைத் தவிர்த்து சிலர் முழு நாள் விரதமும், ஒரு சிலரோ ஒருவேளை உணவும், இன்னும் சிலரோ எளிமையான சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றாற் போல விரத முறையைத் தேர்வு செய்து கொள்வது மிகவும் சிறந்தது.

இந்த மாதத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்த்து எளிமையான உணவுகளை சமைப்பதும் பெரும்பாலான குடும்பங்களின் பாரம்பரிய வழக்கமாகும். விரதம் என்பது உணவை மட்டும் தவிர்ப்பது அல்ல. மனதில் உள்ள எண்ணங்களிலும் செயல்களிலும் கட்டுப்பாட்டை கொண்டு வருவதே ஆகும்.

சனிக்கிழமை

இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாளில் சிலர் திருப்பக்கு சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, காணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல, இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவாலயங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், சனி தோஷம் விலகும். சூரிய பகவானின் இச்சா சக்தியான உஷா தேவியின் புத்திரனாக தோன்றியவர் சனீஸ்வரன். இதனால், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

மேலும், சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்களில் காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நாட்களில் பெருமாளை வணங்கினால் அனைத்துவிதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கையாகும்.

கடன் கொடுக்கக் கூடாது

சனி, புதன் திசை நடப்பவர்கள் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட வேண்டும். அப்படி செய்தால், தடைகள் நீங்கும். பவங்கள் நீங்கி புண்ணியமும், சுபயோக சுபங்களும் கூடும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால், தர்மம் மட்டும் அதிகளவு செய்ய வேண்டும். இந்த சனிக்கிழமைகளில் ஆலம் இலையின் மீது எள்ளும், வெல்லமும் கலந்த சாப்பாடு வைத்தால், சனியின் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆண்டு முழுவதும் சனிக்கிழமை விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை தரிசனம் செய்தால், ஆண்டு முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலனை பெற முடியும் என்று சொல்வார்கள். இதன்மூலமே புரட்டாசி சனிக்கிழமைகளில் மகத்துவத்தை நாம் உணர முடியும்.

கலியுக பயணம்

கலியுகத்திற்கு புறப்பட சனி கவான் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக வந்த நாரதர், ‘பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால், திருமலை பக்கம் மட்டும் சென்று விடாதீர்கள்,’ என்று எச்சரித்துள்ளார். ஆனால், நாரதரின் எச்சரிக்கையையும் மீறி, சனி பகவான், திருமலைக்கு சென்று கால் வைத்துள்ளார். அடுத்த நொடியே அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். அனைவருக்கும் துன்பத்தை கொடுக்கும் சனி பகவானுக்கு, பூலோக வைகுண்டமான திருமலையில் என்ன வேலை என்று மகா விஷ்ணு கோபம் கொண்டுள்ளார். அவரின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்ட சனி பகவானிடம், ‘புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தன்னுடைய அருள் கிடைக்கும்,’ என்று மகாவிஷ்ணு வரம் கொடுத்ததாக புராணங்கள் சொல்வதுண்டு.

அதேபோல, நவகிரகங்களில் தன்னை மட்டும் யாரும் வழிபடவில்லை. அனைவரும் வெறுப்பை உமிழ்வதாக கவலைக் கொண்ட சனிபகவான், மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். இதனை ஏற்று அவர் முன்பு தோன்றிய மகா விஷ்ணு, தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் உன்னை விரும்பி வழிபாடுவார்கள். அப்படி வழிபடுபவர்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

பாண்டவர்கள்

பாண்டவர்கள் வனவாசம் சென்ற சமயத்தில், புரட்டாசி சனிக்கிழமைகளில் தவறாமல் விரதமிருந்து, பெருமாளை வணங்கியதால் தான், அவர்கள் போரில் வென்றதாகவும், இதனால், இழந்த நாடு, செல்வத்தையும் அவர்கள் திரும்பவப் பெற்றதாக புரணாங்கள் சொல்வதுண்டு. இத்தகைய புரட்டாசி சனிக்கிழமையான நாளை விரதமிருந்து, பெருமாளின் அருளையும், ஆசியையும் பெறலாம்.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

கோவையில் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவில்; வருடத்திற்கு வெறும் 5 நாட்களே அனுமதி

கோவை: புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே அனுமதியளிக்கப்படும் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவிலான, பெருமாள் முடி யாத்திரை நாளை (செப்டம்பர் 19) துவங்குகிறது. பாவங்களை போக்கும் புரட்டாசி பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...