நேபாள் சென்று வெற்றிக்கொடி நாட்டிய கோவை குட்டீஸ்!

கோவை: நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 18 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். புதுடெல்லி வழியாக இவர்கள் மே 15ஆம் தேதி இரவு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை வந்தடைந்தனர்.

சிலம்பம் மற்றும் தடகளப் பயிற்சிகளை வழங்கி வரும் மோகன்ஸ் அகாடமி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகாடமியின் மூலம் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன், இந்திய அரசு அறக்கட்டளைச் சட்டம் 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இது நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசின் ஃபிட் இந்தியா மூவ்மெண்ட் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிறுவனம் நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் அகாடமியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 25 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி 25ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வாள் வீச்சு, வேல்கம்பு வீச்சு, மான்கொம்பு மற்றும் ஸ்டிக் பைட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்தனர்.

இந்நிலையில், கடந்த மே 10ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற இண்டோ-நேபாள் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் மோகன்ஸ் அகாடமி சார்பில் 18 மாணவர்கள் பங்கேற்றனர்.

அண்டர்-7, அண்டர்-9, அண்டர்-11, அண்டர்-13, அண்டர்-15, அண்டர்-17, அண்டர்-19 மற்றும் சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, வாள் வீச்சு, வேல்கம்பு வீச்சு, மான்கொம்பு வீச்சு மற்றும் ஸ்டிக் பைட்டிங் போட்டிகளில் கலந்து கொண்ட 18 மாணவர்களும் தங்களது வயது பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும், இந்த 18 மாணவர்களும் தாய்லாந்தில் நடைபெற உள்ள ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.